×

ஆற்காடு அரசு பள்ளியில் மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள்-அமைச்சர் வழங்கினார்

ஆற்காடு : ஆற்காடு அரசு பள்ளியில் மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்களை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார். ஆற்காடு அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் தமிழக அரசின் இலவச பாட புத்தகங்கள் நேற்று வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில்  தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்களை வழங்கினார். அப்போது, மாணவர்கள் அனைவரும் நன்றாக படித்து கல்வியில் சாதனை புரிய வேண்டும். பெற்றோர்களுக்கும், கல்வி போதித்த ஆசிரியர்களுக்கும், படித்த  பள்ளிக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். இதில், கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ், எம்எல்ஏ ஈஸ்வரப்பன், தாசில்தார் காமாட்சி, தலைமையாசிரியர் சுகுமார்,  மாவட்ட திமுக துணை செயலாளர் சுந்தரமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் ராஜசேகரன், நகர கூட்டுறவு வங்கி இயக்குனர் சரவணன், முன்னாள் நகராட்சி துணைத்தலைவர் பொன் ராஜசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்….

The post ஆற்காடு அரசு பள்ளியில் மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள்-அமைச்சர் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Arkadu Government School ,Achadu ,Minister ,R.R. Gandhi ,Arkadu Rasinar Men ,Government School ,Dinakaran ,
× RELATED உளுந்தூர்பேட்டையில் புதியதாக ஆய்வு...