தாய்ப்பால் குறைவைப் போக்கும் அம்மான் பச்சரிசிக் கீரை!

நன்றி குங்குமம் டாக்டர்

இன்றைய சூழலில் பிரசவித்த பெண்கள்  பலரும் சந்திக்கும் பிரச்சனை குழந்தைக்குப் பால் போதவில்லை என்பது. இதற்கு. எங்கெங்கோ, என்னென்னவோ மருத்துவம், உணவுகளை தேடித் தேடி அலையும் நமக்கு, நமது காலடியில் இருக்கும் ஒரு பாலாடை போதும். தாய்க்கு அருவிபோல் பால்சுரக்க.. இதுதான் சித்திரப் பாலாடை என்ற மூலிகை. அது என்ன

சித்திரப் பாலாடை என்கிறீர்களா.. அது வேறொன்றுமில்லை அம்மான் பச்சரிசி கீரைதான். இதற்கு ‘சித்திரப் பாலாடை‘ என இன்னொரு பெயரும் உண்டு.

துவர்ப்பு கலந்த இனிப்புச் சுவை கொண்ட இந்த கீரையின் முழுத் தாவரமும் மருந்தாக பயன்படக்கூடியது. குளிர்ச்சித் தன்மைகொண்ட இந்த கீரையை எங்கு கிள்ளினாலும் பால் வடியும். சாதாரணமாக எல்லா இடங்களிலும் வளரக்கூடியது இந்த சிறு செடி. சொரசொரப்பான எதிர்அடுக்கு இலைகளைக்கொண்ட கீரையிது. சிறு பூண்டு இனத்தைச் சேர்ந்த இது  வெண்ணிறமும் செந்நிறமும் சேர்ந்து காணப்படும் மூலிகை. சிறு அம்மான் பச்சரிசி, பெரு அம்மான் பச்சரிசி என இரு வகைகளும் உண்டு. இதன் விதைகள் தோற்றத்திலும், சுவையிலும் அரிசிகுருணை போலிருப்பதால் பச்சரிசி கீரை என்றும் அம்மான் பச்சரிசி என்றும் அழைக்கப்படுகிறது.

இதன் இலைகள், பூக்கள், வேர், விதை என அனைத்து பாகமும் மருத்துவக்குணம் கொண்டது. இது ஒரு கீரை வகையை சேர்ந்தது. பிரசவித்த பெண்களுக்கு கொடுக்கப்படும் ஒரே கீரை இதுதான். காரணம் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கச் செய்யும் தன்மை கொண்டது.  மேலும், எந்த தொற்றுக் கிருமிகளையும் அண்ட விடாது.

இதன் இலைகளை நீரில் கலந்து மிதமான தீயில் கொதிக்கவைத்து அதனை அருந்த, கொடிய தொற்றுநோய்களும் விலகும். இதன் பூக்களை மைய அரைத்து அல்லது பூக்களை நேரடியாக பசும் பாலுடன் சேர்த்து காய்ச்சிபருகிவர தாய்ப்பால் நன்கு சுரக்கும். இதனை காலை மாலை என இரண்டு வேளை பனங்கற்கண்டு சேர்த்து அருந்துவதால் உடலுக்கு நல்ல பலமும் தெம்பும் கிடைக்கும்.

அம்மான் பச்சரிசியின்  வேறு மருத்துவக் குணங்கள்  என்னவென்று பார்ப்போம்:

உடலில்  எங்கேனும்  மறுக்கள் ஏற்பட்டால், இதன் பாலை தொடர்ந்து பூசி வர,  மறுக்கள் உதிர்ந்துவிடும். மேலும் முகத்தில் தோன்றும் அனைத்து சரும தொந்தரவுகளுக்கு இதன்பால் உதவும். கரும்திட்டுகள், கட்டிகளுக்கும் இதனை பூசலாம்.இந்த அம்மான் பச்சரிசி இலைகளை நன்கு மைய அரைத்து மோருடன் கலந்து குடித்து வர பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய்த் தொந்தரவுகள், வெள்ளைப்படுதல் நீங்கும்.

 அம்மான் பச்சரிசி ஆணிக் கால் நோய்க்கு  நல்ல  மருந்தாகிறது.  மேலும்,  பாத வெடிப்பு, உதட்டில் ஏற்படும் வெடிப்புகள், நிறமாற்றத்திற்கும் இதனை பயன்

படுத்த சிறந்த நிவாரணம் கிடைக்கும். வாய்ப்புண்கள் மறையும்.

உடலில்  எங்கெனும்  வீக்கமோ, வலியோ  ஏற்பட்டால்  இந்த கீரையை சமைத்து  உண்டு வர நிவாரணம்  கிடைக்கிறது. இதனில் கூட்டு, துவையல், பொரியல் செய்து உண்பதால் உடலில் ஏற்படும் புண்கள், மலச்சிக்கல், நரம்பு வீக்கம், நாவறட்சி, உடல் வறட்சி நீங்கும்.அம்மான் பச்சரிசி இலையை  நிழலில்  உலர்த்தி பொடித்து வைத்துகொள்ளவும். காலையில் வெதுவெதுப்பான நீர் அரை டம்ளர் எடுத்து அரை டீஸ்பூன் அளவு கலந்து  குடித்துவந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும். துர்நாற்றத்துடன் கூடிய வெள்ளைப்படுதல்இந்த அம்மான்பச்சரிசி மூலிகை காசநோயினை கட்டுப்படுத்தும் தன்மைகொண்டது. குடல் சார்ந்த தொந்தரவுகள், ஆஸ்துமாவிற்கு சிறந்த மருந்து. சிறுநீர்க் கடுப்பு, எரிச்சலைப் போக்கும் தன்மை கொண்டது.

அம்மான் பச்சரிசி துவையல் மலச்சிக்கலை போக்கும்.  ஒரு கையளவு அம்மான் பச்சரிசி இலைகள், உளுந்து, பூண்டு, சின்ன வெங்காயம் சிறிது மிளகு, புளிப்பிற்கு ஒரு தக்காளி ஆகியவற்றை நெய்யில் வதக்கி அரைக்க சுவையான அம்மான் பச்சரிசி துவையல் தயார்.இதனை பாசிப்பருப்பு, சின்னவெங்காயம், பூண்டு, தக்காளி சேர்த்து கூட்டாகவும் செய்ய சுவையாக இருக்கும். இதனுடன் தூதுவளை இலைகளையும் சேர்த்து துவையல் செய்து உண்ண உடல் பலம் பெரும்.பிறந்த குழந்தையை தாய்ப்பால் கொடுத்து தேற்றும் இந்த அம்மான் பச்சரிசி அனைவரின் உடல் ஆரோக்கியத்திற்கும் உத்தரவாதமாக உள்ளது. இனி பயன்படுத்துவோம், பாதுகாப்போம் நமது காலடியில் இருக்கும் பொக்கிஷங்களை.

தொகுப்பு : நா.நாச்சாள்

Related Stories: