சென்னை: பொதுப்பணித்துறையில் நிர்வாக பிரிவு உருவாக்கம் செய்து கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா உத்தரவிட்டுள்ளார். திமுக ஆட்சி பொறுப்பேற்ற நிலையில் நீர்வளத் துறைக்கு தனியாக துரைமுருகன் அமைச்சராக நியமனம் செய்யப்பட்டார். அதே போன்ற பொதுப்பணித்துறை அமைச்சராக ஏ.வ.வேலு நியமனம் செய்யப்பட்டார். இந்த நிலையில், பொதுப்பணி, நீர்வளத்துறையில் நிர்வாகத்தை பிரித்து தமிழக அரசின் பொதுப்பணித்துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா உத்தரவிட்டுள்ளார். அதில், பொதுப்பணித்துறையில் (பொது) நிர்வாக பிரிவு ஏற்படுத்தப்படுகிறது. இந்த பிரிவின் முதன்ைம தலைமை பொறியாளர் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகிறது. அவர் புதிய நியமனம், காலி பணியிட அறிக்கை தயார் செய்வது, சீனியாரிட்டி பட்டியல் தயார் செய்வது, பதவி உயர்வு, பணியிட மாற்றம், ஊதிய நிர்ணயம், ஒழுங்குமுறை நடவடிக்கை, ஓய்வு பெற்றவர்களின் ஓய்வூதிய அறிக்கை தயார் செய்வது போன்ற பணிகளை நிர்வாக பிரிவு மேற்கொள்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….
The post பொதுப்பணித்துறையில் நிர்வாக பிரிவு உருவாக்கம்: தமிழக அரசு உத்தரவு appeared first on Dinakaran.
