×

புள்ளி, கோடு இல்லாமல் கமல் படம்: கேரள பெண்ணுக்கு பாராட்டு

சென்னை: புள்ளிகள் மற்றும் கோடுகள் இல்லாமல், கமல்ஹாசன் என்ற பெயரை மட்டுமே பயன்படுத்தி, இரண்டரை மணி நேரத்தில் பென்சிலை கொண்டு தன்னை வரைந்த கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த இளம் பெண் நேஹா பாத்திமா என்பவருக்கு கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து நேற்று அவர் தனது டிவிட்டரில் வெளியிட்ட பதிவில், ‘கோழிக்கோடு நேஹா பாத்திமா  புள்ளிகளும், கோடுகளும் இல்லாமல், என் பெயரை எழுதியே என் முகத்தோற்றத்தை வரைந்திருக்கிறார். இந்திய, ஆசிய, அமெரிக்க, சர்வதேச சாதனை புத்தகங்களில் இதற்காக இடம்பெற்றுள்ளார். வஜ்ரா உலக சாதனையும் படைத்திருக்கிறார். ‘பேர் சொல்லும் பிள்ளை’ என்பது இதுதானா’ என்று குறிப்பிட்டுள்ளார்….

The post புள்ளி, கோடு இல்லாமல் கமல் படம்: கேரள பெண்ணுக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Kamal ,Kerala ,Chennai ,Kamalhaasan ,
× RELATED சமத்துவம் நிலவவேண்டும் என்பதற்காகவே...