×

மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு, தமிழ்நாடு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து

சென்னை: மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு, தமிழ்நாடு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: அகிம்சையை கடைபிடிக்க வேண்டும், கொல்லாமையும், பிற உயிர்களுக்கு தீங்கு செய்யாமையுமே அறம் என்று அகிம்சை நெறியை உலகிற்கு உணர்த்தியவர் மகாவீரர். அவரது போதனைகளை பின்பற்றி வாழ்வோம்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: மகாவீரரின் வாழ்க்கையை மனிதகுலம் முழுமையும் கடைபிடித்தால் உலகம் அமைதியும், வளமும், மகிழ்ச்சியும் நிறைந்த, இல்லாமை என்பதே இல்லாததாகவும் மாறும். பாமக தலைவர்

அன்புமணி ராமதாஸ்:  எறும்புக்குக் கூட தீங்கு விளைவிக்காமல்  வாழ்ந்து காட்டிய மகாவீரரின் பிறந்த நாளைக் கொண்டாடும் இந்த நன்னாளில்,  அவரின் போதனைகளை பின்பற்றி வாழ நாம் அனைவரும் உறுதியேற்போம்.

Tags : Mahavir Jayanti ,Tamil Nadu , Greetings from Tamil Nadu political party leaders on the occasion of Mahaveer Jayanti
× RELATED ரேசன் கடைகளில் மே மாதத்திற்கான...