×

பென்னாகரம் அருகே 2 யானைகள் அடுத்தடுத்து உயிரிழப்பு: யானைகள் எப்படி இறந்தன என வனத்துறை விசாரணை

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே 2 யானைகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளன. தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே 2 யானைகள் உயிரிழந்துள்ளது. பென்னாகரம் பகுதியில் வெவ்வேறு இடங்களில் ஆண், பெண் யானை உயிரிழந்துள்ளது. தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே கோடுப்பட்டி சின்னாறு வனப்பகுதியில் 10 வயது பெண் யானை சின்னாறு ஆற்றில் தண்ணீர் குடிப்பதற்காக சென்ற போது ஆற்றில் சிக்கி யானை உயிரிழந்துள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பென்னாகரம் வனத்துறையினர் யானை உயிரிழந்த காரணம் அறிய கால்நடை மருத்துவர்கள் பிரேத பரிசோதனைக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

அதேபோல் பென்னாகரம் வனப்பகுதியில் 8 வயது யானை உயிரிழந்துள்ளதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் யானையின் உடலை பிரேத பரிசோதனைக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. கோடை காலம் தொடங்கிய நிலையில் போதிய தண்ணீர் இல்லாததால் யானைகள் தொடர்ந்து கிராம பகுதிகள் மற்றும் ஊருக்குள் வருவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில், யானை தண்ணீர் குடிப்பதற்காக சென்ற 2 யானைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Pennagaram ,Forest Department , Pennagaram, Elephant, Casualty, Forest Department, Investigation
× RELATED கிருஷ்ணகிரி அருகே கிராமங்களை...