×

குனோ தேசிய பூங்காவிலிருந்து வௌியேறிய சிவிங்கி புலியால் மக்கள் அச்சம்

ஷியோபூர்: இந்தியாவில் அழிந்து விட்ட இனமாக கருதப்பட்ட சிவிங்கி புலி இனத்தை மீட்டெடுக்கும் முயற்சியாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், ஆப்பிரிக்காவின் நமீபியாவிலிருந்து 5 பெண், 3 ஆண் என மொத்தம் 8 சிவிங்கி புலிகள் இந்தியா அழைத்து வரப்பட்டன. அவை மத்தியபிரதேச மாநிலம் குனோ தேசிய பூங்காவில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில் சாஷா என்ற பெண் சிவிங்கி புலி அண்மையில் உயிரிழந்து விட்டது.

இந்நிலையில், ஓபன் என்று பெயரிடப்பட்ட ஆண் சிவிங்கி புலி குனோ தேசிய பூங்காவிலிருந்து வழிதவறி வௌியேறி, 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பரோ கிராமத்தின் வயல்வௌிகளில் சுற்றி திரிகிறது. வயலில் சிவிங்கி புலியை கண்ட மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இதுகுறித்து கிராம மக்கள் தெரிவித்த தகவலின் அடிப்படையில், அதன் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதனை மீண்டும் காட்டுக்குள் விரட்டும் பணியில் வனத்துறை ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Tags : Kuno National Park , People are afraid of Chivingi tiger that escaped from Kuno National Park
× RELATED குனோ தேசிய பூங்காவில் இருந்து...