×

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் தயார் நிலையில் உள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் தயார் நிலையில் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோன பரவல் அதிகரித்து வருகிறது. கடந்த (30.03.2023) ஒரே நாளில் இந்தியாவில் 3,016 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இது கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவிற்கு அதிகமாகும். இதேபோல் நேற்று முன் தினம் ஒரே நாளில் இந்தியாவில் 3,094 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனிடையே கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 3,823 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மராட்டியம், கேரளா, கர்நாடகம், தமிழ்நாடு, டெல்லி, குஜராத், இமாசலபிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் 3 இலக்கங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அந்த மாநிலங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் தயார் நிலையில் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். நீலகிரி மாவட்டம் உதகையில் இன்று மாரத்தான் போட்டி நடைபெற்றது. மாரத்தான் போட்டியை  அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் தயார் நிலையில் உள்ளன. கோவையில் 1000 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதி தயார் நிலையில் உள்ளது எனவும் அமைச்சர் கூறியுள்ளார். 


Tags : Tamil Nadu ,Minister ,Superamanian , Corona prevention measures are ready in Tamilnadu: Minister M. Subramanian interview!
× RELATED செஸ் போட்டிகளில் குகேஷின் வெற்றி...