×

உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் வெகு விமர்சையாக தொடங்கியது குருத்தோலை பவனி விழா!

நாகப்பட்டினம்: உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் வெகு விமர்சையாக நடைபெற்ற குருத்தோலை ஞாயிறு பவனி திருவிழா தொடங்கியது. பாதயாத்திரையாக வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கைகளில் குருத்தோலைகளை கைகளில் ஏந்தியவாறு ஓசன்னா பாடலை பாடி பங்கேற்றனர். இயேசு கிறிஸ்து 40 நாட்கள் உபவாசம் இருந்ததை நினைவு கூரும் வகையில், கிறிஸ்தவர்கள் ஆண்டு தோறும் 40 நாட்கள் தவக்காலம் கடைபிடித்து வருகின்றனர்.

அதன்படி இந்த ஆண்டு தவக்காலம் கடந்த பிப்ரவரி மாதம் 22,ம் தேதி சாம்பல் புதன் அன்று தொடங்கியது. அதனை தொடர்ந்து குருத்தோலை ஞாயிறையொட்டி நாகை மாவட்டம் உலக புகழ்பெற்ற  வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு  கொண்டாடப்பட்டது. பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் பங்கு தந்தைகள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

தொடர்ந்து நடைபெற்ற குருத்தோலை பவனியில்  திரளான பக்தர்கள் கலந்து கொண்டு குருத்தோலைகளை கைகளில் ஏந்தியவாறு ஓசன்னா கீர்த்தனைகளை பாடியவாறு பவனியாக சென்றனர். அதனை தொடர்ந்து வேளாங்கண்ணி பேராலயத்தில் தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம், இந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்று மனம் உருக பிரார்த்தனை செய்தனர்.

Tags : gurutholai bhavani festival ,agirangnini , The Kurutholai Bhavani festival started with great acclaim at the world famous Velankanni Temple!
× RELATED வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்!