×

2 நாளில் ஆபரேஷன் மரணம் கூட நேரலாம்: நடிகர் பாலா உருக்கம்

சென்னை: தமிழில், ‘அன்பு’ படத்தின் மூலம் ஹீரோவானவர் பாலா. இயக்குநர் சிறுத்தை சிவாவின் தம்பியான இவர், வீரம், அண்ணாத்த உள்பட சில தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் தொடர்ந்து நடித்து வருகிறார். 2010ம் ஆண்டு பாடகி அம்ருதா சுரேஷை காதலித்து திருமணம் செய்தார் பாலா. பின் கருத்து வேறுபாடால் அவரை பிரிந்தார். கடந்த 2021ம் ஆண்டு எலிசபெத் உதயன் என்ற டாக்டரை மறுமணம் செய்துகொண்டார். இந்நிலையில் கடந்த மாதம் கல்லீரல் பிரச்னை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பாலா உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘எனக்கு 2 நாட்களில் முக்கிய அறுவை சிகிச்சை நடக்க இருக்கிறது. மரணம் கூட நேரலாம். ஆனால் உங்கள் பிரார்த்தனையால் பிழைத்துக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. நம்பிக்கையுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறேன். இன்று எங்களது 2வது ஆண்டு திருமண நாள். என் மனைவி கொண்டாட விரும்பினார். பிறப்போ, இறப்போ கடவுள் முடிவெடுப்பார்’ என்று தெரிவித்துள்ளார்.Tags : Actor ,Bala Urukkam , 2-day operation can even lead to death: Actor Bala Urukkam
× RELATED நடிகை திரிஷா பற்றி அவதூறு கருத்து...