காவிரி ஆணைய கூட்டம் வரும் 11ம் தேதி நடக்கிறது

புதுடெல்லி: தமிழகம், கர்நாடகா உட்பட நான்கு மாநிலங்களின் நீர் பங்கீட்டு பிரச் னையை தீர்க்கும் விதமாக காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்டது.   இந்த நிலையில் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தரப்பில் இருந்து நேற்று ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில்,‘‘காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 20வது கூட்டம் ஏப்ரல் 11ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. அப்போது நீர் பங்கீடு தொடர்பான அனைத்தும் விவாதிக்கப்பட உள்ளது. குறிப்பாக மேட்டூர் நீர் தேக்கத்தில் இருந்து வெள்ள உபரி நீரை சேலத்தில் உள்ள சரபங்கா துணைப் படுகையில் உள்ள வறண்ட தொட்டிகளுக்கு திருப்பி விடுவதற்கான தமிழக அரசின் திட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடரப்பட்டுள்ள வழக்கு தொடர்பாக விவாதம் நடத்தப்படும். காவிரிப் படுகையின் மாதாந்திர, பருவகாலம் மற்றும் வருடாந்திர நீர் பங்கீடு பற்றியும் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி அட்டவணையில் மேகதாது அணை விவகாரம் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: