சேலம் மாவட்டம் அதிகாரிப்பட்டியில் கழிவுநீர் கால்வாயில் விழுந்து கர்ப்பிணி உயிரிழப்பு

சேலம்: சேலம் அதிகரிப்பட்டியில் கழிவுநீர் ஓடையில் தவறி விழுந்து சந்தியா என்ற கர்ப்பிணி உயிரிழந்துள்ளார். 4 மாத கர்ப்பிணி தவறி விழுந்தபோது வீட்டின் அருகே உள்ள கழிவுநீர் கால்வாய் திறந்திருந்தாக புகார் தெரிவித்துள்ளனர்.

சேலம் அதிகரிப்பட்டி என்ற கிராமத்தில் கார்த்தி என்பவருக்கும் சந்தியா என்பருக்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் ஆனது. தற்போது சந்தியா நான்கு மாதம் கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்த நிலையில் திடீரென வாந்தி ஏற்பட்ட நிலையில் வாந்தி எடுப்பதற்காக வீட்டிற்கு வெளியே இருக்க கூடிய கழிவுநீர் கால்வாய் அருகே வந்து இருக்கிறார். சிறிது நேரத்தில் அவருக்கு மயக்கம் ஏற்பட்ட நிலையில் அதே கால்வாயில் தவறி விழுந்துள்ளார்.

உடனடியாக யாரும் பார்க்காத நிலையில் சிறிது நேரம் கழித்து தான் அக்கம் பக்கம் உள்ளவர்களுக்கு சந்தியா அந்த கழிவுநீர் ஓடையில் விழுந்து இருப்பது தெரியவந்தது. உடனடியாக அங்கு இருப்பவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போதே சந்தியா உயிரிழந்துள்ளார்.

அவரை பரிசோத்தித்த அரசு மருத்துவர்கள் தரப்பில் தெரிவித்துள்ளார். இந்த சோக சம்பவத்திற்கு காரணம் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பாக அதிகாரிப்பட்டியில் சாக்கடை அகலப்படுத்தும் பணி நடைபெற்றது. தற்போது ஆழப்படுத்தி அகலப்படுத்தும் அந்த கால்வாய் குடியிருப்பு பகுதியில் மேற்கூரை மூடாமல் அப்படியே திறந்தவெளியேயாக உள்ளதால் இது போன்று ஒரு சோக சம்பவம் நடந்துள்ளது என்று தெரிவித்துள்ளனர். ஏற்கனவே சிறுவர்கள் இந்த கால்வாயில் விழுந்து உயிரிழந்து இருக்கிறார்கள் என்றும் இந்த கால்வாய் குறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக அதிகாரிகள் இருப்பதாக பொதுமக்கள் குற்றசாட்டு வைத்துள்ளனர்.

தற்போது சேலம் அரசு மருத்துவமனையில் சந்தியாவின் உடல் உடற்கூறாய்விற்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நான்கு மாத கர்ப்பிணி உயிரிழந்தது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: