டெல்லி சாஸ்திரி பூங்கா அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழப்பு

டெல்லி: டெல்லி சாஸ்திரி பூங்கா அருகே கொசுவத்தி சுருளில் இருந்து வந்த நச்சு புகையை சுவாசித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர். சென்னை சாஸ்திரி பூங்கா பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் கொசு விரட்டி மருந்தில் இருந்த நச்சு வாயுவை சுவாசித்ததின் காரணமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று இரவு கொசு விரட்டியை எரியவிட்டு தூங்கிய நிலையில் கொசு விரட்டியின் சுருள் மெத்தையின் மீது விழுந்ததில் தீ பற்றி அறை முழுவதும் புகை மண்டலமாக மாறியுள்ளது. நச்சு தன்மை கொண்ட புகை வெளியேற வாய்ப்பில்லாதலால் தூக்கத்தில் இதனை சுவாசித்த 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் 2 பேர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டதுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் நான்கு ஆண்கள் 1 பெண் மற்றும் 1அரை வயது குழந்தையும் உயிரிழந்தது. விபத்து குறித்து அக்கம் பக்கம் தெரிவித்த புகாரின் அடிப்படையில் காவல்துறை சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் உயிரிழந்தவர்களின் உடல் பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.

Related Stories: