ஏஎஸ்பி பல்வீர் சிங் பல் புடுங்கிய விவகாரம் தொடர்பாக 5பேரிடம் மனித உரிமை ஆணையம் விசாரணை..!!

சென்னை: ஏஎஸ்பி பல்வீர் சிங் பல் புடுங்கிய விவகாரம் தொடர்பாக 5 பேரிடம் மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. பல்லை பிடுங்கி ஏஎஸ்பி சித்ரவதை என்ற புகார் தொடர்பாக சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தில் 5 பேர் ஆஜராகினர். நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட 5 பேரிடம் மாநில மனித உரிமை ஆணைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். செல்லப்பா, இசக்கிமுத்து, சுபாஷ், வேதநாராயணன் உள்பட 5பேர் தங்களுக்கு நேர்ந்தகொடுமை குறித்து வாக்குமூலம் அளித்து வருகின்றனர்.

Related Stories: