சென்னை: நீலகிரி - தேயிலை செடிகள் வனத்துறையால் அகற்றப்பட்டது தொடர்பாக சட்டப்பேரவையில் அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தது. எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். 15 ஆயிரம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 40 ஆண்டுகாலம் வளர்த்த தேயிலை செடிகளை வனத்துறை அழித்துள்ளதாக ஈபிஎஸ் புகார் தெரிவித்தார்.