×

கலாஷேத்ரா கல்லூரி பேராசிரியர்கள் மீதான பாலியல் புகார் குறித்து சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்..!!

சென்னை: கலாஷேத்ரா கல்லூரி பேராசிரியர்கள் மீதான பாலியல் புகார் குறித்து சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. காவல்துறை நடவடிக்கை எடுக்க காங்கிரஸ், வி.சி.க உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவையில் கோரிக்கை விடுத்தனர். கலாஷேத்ராவின் ருக்மணி தேவி கல்லூரி மாணவிகளின் புகார் குறித்து முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. கலாஷேத்ராவில் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என எஸ்.எஸ்.பாலாஜி கூறினார்.

Tags : Kalashetra College ,Legislative Assembly , Kalashetra College, Sex, Conference, Resolution
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்