×

ராமநவமி விழாவில் சோகம்ம.பியில் படிக்கட்டு கிணறு இடிந்த விபத்தில் 13 பேர் பலி

இந்தூர்: மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ராமநவமி விழாவில் படிக்கட்டு கிணறு சரிந்து விழுந்த விபத்தில் இதுவரை 13 பேர் பலியாகினர். மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் படேல் நகரில் உள்ள பலேஷ்வர் மகாதேவ் ஜுலேலால் என்ற புகழ்பெற்ற பழமையான கோயிலில் ராமநவமி விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். விழாவின் ஒருபகுதியாக நடைபெற்ற தீப சடங்கை முன்னிட்டு, அங்கிருந்த படிக்கிணற்றில் குளிக்க பக்தர்கள் முண்டியடித்து கொண்டு உள்ளே இறங்கினர். அப்போது பாரம் தாங்காமல் கிணற்றின் படிக்கட்டுகள் சரிந்து விழுந்ததில் 30க்கும் மேற்பட்டோர் கிணற்றுக்குள் விழுந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் கிணற்றுக்குள் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த 13 பேர் உயிரிழந்து விட்டனர்.  மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில், விபத்து குறித்து பிரதமர் மோடி, முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் ஆகியோர் வேதனை தெரிவித்துள்ளனர்.




Tags : Ramnavami festival ,Sokamma.P. , 13 people were killed in an accident where a stepwell collapsed in Sokamma.P during Ramnavami festival
× RELATED மேற்குவங்க ராமநவமி வன்முறையில் பாஜக...