இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தலைமை நீதிபதியின் அதிகாரங்களை கட்டுப்படுத்தும் சட்டம் நேற்று நிறைவேறியது. பாகிஸ்தான் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் அதிகாரங்களை கட்டுப்படுத்தும் சட்ட மசோதாவை அந்நாட்டின் சட்ட அமைச்சர் அசாம் நசீம் தரார் நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தார். அப்போது எதிர்கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் எம்பி.க்கள் இதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்தனர். மேலும், தனிப்பெரும்பான்மை உடன் ஒரு சட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் அதிகாரத்தை கட்டுப்படுத்துவது என்பது முறையற்றது. நாடாளுமன்ற விவாதத்துக்கு எடுத்து செல்ல வேண்டும் என்று எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது.