×

ஆந்திரா கோயிலில் தீ

திருமலை: ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் துவா கிராமத்தில் வேணுகோபால சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் நேற்று ராம நவமியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.  கோயிலில் ராம நவமி பூஜைகள் நடைபெற்று கொண்டு இருந்தது. இதனை காண நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோயில் வளாகத்தில் திரண்டு இருந்தனர். இந்நிலையில், நிழலுக்காக போடப்பட்டிருந்த பனை ஓலை பந்தல் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. பக்தர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேறினர். உயிர் சேதம் ஏற்படவில்லை.



Tags : Andhra Pradesh Temple , Andhra temple fire
× RELATED கடும் பனிப்பொழிவால் தஞ்சை பூ மார்க்கெட்டுக்கு மல்லிகை வரத்து குறைவு