×

தமிழகத்தில் 14 ஏடிஎஸ்பிக்கள் எஸ்பிக்களாக பதவி உயர்வு: 6 எஸ்பிக்கள் பணி மாற்றம்

சென்னை: தமிழகத்தில் 14 ஏடிஎஸ்பிக்களுக்கு எஸ்பிக்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. 6 எஸ்பிக்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: வேலூர் போலீஸ் பயிற்சிப் பள்ளி கூடுதல் எஸ்பி அசோக்குமார், பதவி உயர்வில் வேலூர் சேவூர் தமிழ்நாடு சிறப்புக் காவல்படையின் கமாண்டன்ட் ஆகவும், செங்கல்பட்டு சைபர் கிரைம் கூடுதல் எஸ்பி பொன்ராமு, பதவி உயர்வு பெற்று, சென்னை ரயில் எஸ்பியாகவும், அரியலூர் சைபர் கிரைம் கூடுதல் எஸ்பி ரவிசேகரன், தலைமையிட உதவி ஐஜியாகவும், திருச்சி தலைமையிட கூடுதல் எஸ்பி ஆசைத்தம்பி, திருப்பூர் நகர தலைமையிட துணை கமிஷனராகவும், ராணிப்பேட்டை சைபர் கிரைம் கூடுதல் எஸ்பி முத்துக்கருப்பன், பழனி சிறப்பு காவல்படை கமாண்டன்ட்டாகவும், ஈரோடு சைபர் கிரைம் கூடுதல் எஸ்பி ஜானகிராமன், பதவி உயர்வு பெற்று ஆவடி கமாண்டன்ட்டாகவும், நாமக்கல் சைபர் கிரைம் கூடுதல் எஸ்பி சந்திரமவுலி, சென்னை போலீஸ் பயிற்சிக் கல்லூரி எஸ்பியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பழனி பட்டாலியன் கூடுதல் எஸ்பி மங்களீஸ்வரன், பதவி உயர்வு பெற்று மதுரை நகர தலைமையிட துணை கமிஷனராகவும், வேலூர் சைபர் கிரைம் கூடுதல் எஸ்பி குணசேகரன், பதவி உயர்வு பெற்று சேலம் நகர தலைமையிட துணை கமிஷனராகவும், தர்மபுரி மாவட்ட தலைமையிட கூடுதல் எஸ்பி அண்ணாமலை, பதவி உயர்வு பெற்று மாநில போதைத் தடுப்பு பிரிவு எஸ்பியாகவும், திருநெல்வேலி பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்பு கூடுதல் எஸ்பி மாரிராஜன், பதவி உயர்வு பெற்று தூத்துக்குடி பேரூரணி முதல்வராகவும், நீலகிரி மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் எஸ்பி மோகன் நவாஸ், சென்னை சைபர் கிரைம் துணை கமிஷனராகவும், தி.மலை சைபர் கிரைம் கூடுதல் எஸ்பி சுப்புராஜ், பதவி உயர்வு பெற்று நிர்வாகப் பிரிவு உதவி ஐஜியாகவும், ஆவடி கமிஷனர் அலுவலக சைபர் கிரைம் கூடுதல் துணை கமிஷனர் கெங்கைராஜ், போலீஸ் அகாடமி துணை இயக்குநராகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

மதுரை தலைமையிட துணை கமிஷனர் கவுதம் கோயல், வடக்கு சேலம் துணை கமிஷனராகவும், வேலூரில் உள்ள சேவூர் சிறப்புக்காவல்படையின் கமாண்டன்டாக இருந்த சந்திரசேகரன், கடலோர காவல் எஸ்பியாகவும், சென்னை தலைமையிட உதவி ஐஜியாக இருந்த மீனா, சென்னை சைபர் கிரைம் துணை கமிஷனராகவும், சென்னை நகர உளவுத்துறை துணை கமிஷனர் சக்திவேல், கொளத்தூர் துணை கமிஷனராகவும், சென்னை நகர நிர்வாகப் பிரிவு துணை கமிஷனர் ராமமூர்த்தி, சென்னை நகர உளவுத்துறை துணை கமிஷனராகவும், தமிழ்நாடு சிறப்புக்காவல்படை(பழனி)  கமாண்டன்ட்டாக இருந்த அய்யாச்சாமி, பூந்தமல்லி தமிழ்நாடு சிறப்புக் காவல்படை கமாண்டன்ட்டாகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Tags : Tamil Nadu , 14 ATSPs promoted as SPs in Tamil Nadu: 6 SPs transferred
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...