×

உலகளாவிய ஊழல்வாதிகள் பிரதமரின் பாதுகாப்புக்கு வருகிறார்கள்: காங். சாடல்

புதுடெல்லி:    ஊழல் மற்றும் நிதி மோசடியுடன் தன்னை தொடர்புபடுத்தி பேசும் ராகுல் காந்திக்கு எதிராக இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக லண்டனில் பதுங்கி உள்ள  ேமாசடி தொழிலதிபர் லலித்மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுசெயலாளர் கே.சி.வேணுகோபால்,‘‘ லலித் மோடி பல கோடி ரூபாய் மோசடியில் இருந்து கோழைத்தனத்தினால்  தப்பியோடியவர். பாஜவின் செயலற்ற தன்மை காரணமாக அவர் இப்போது வெளிநாட்டு வாழ்க்கையை அனுபவித்து வருகிறார்.

அவர் கூறுவதை யாராவது தீவிரமாக எடுத்துக்கொள்வார்கள் என்று அவர் நினைப்பது சிரிப்பை வரவழைக்கிறது. பிரதமர் மோடிக்கு உலகளாவிய ஊழல்வாதிகள் பாதுகாப்புக்கு வருவது அவருக்கு ஏற்பட்டுள்ள புதிய சரிவாகும்” என்று குறிப்பிட்டுள்ளார். இதேபோல் காங்கிரஸ் கட்சியின் ஊடக  துறை தலைவர் பவன்கேரா கூறுகையில்,  ‘‘சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராகுல் ஜீயை அச்சுறுத்துவதற்காக இப்போது பிரதமர் மோடி வெளிநாட்டில் இருந்து உதவியை பெறுகிறாரா?” என கேள்வி எழுப்பி உள்ளார்.



Tags : PM ,Kong Sadal , Global corrupt come to PM's defence: Kong Sadal
× RELATED எஸ்ஐஆர் கணக்கெடுப்பு விவகாரம்; 82 வயது...