×

அவ்வையாருக்கு ரூ.12 கோடியில் மணிமண்டபம்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது வேதாரண்யம் எம்எல்ஏ ஓ.எஸ்.மணியன்(அதிமுக) பேசுகையில், ‘‘வேதாரண்யேஸ்வரர் கோயிலின் மூலவருக்கு திருத்தேர் அமைக்கப்பட்டு விட்டது. தமிழ்நாட்டிலேயே, அவ்வையாருக்கு எங்கள் ஊரில் தான் கோயில் இருக்கிறது. அதற்கு மணிமண்டபம் கட்டுப்படுமா என்றார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசுகையில், ‘‘வேதாரண்யேஸ்வரர் கோயிலுக்கு போதிய வருமானம் இல்லாத நிலையிலும் உறுப்பினரின் கோரிக்கையை ஏற்று, பொது நல நிதியில், தேர்கள் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படும். அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது என்ற பாடல் வரிகளின் மூலம் மக்களின் வாழ்வில் அன்றாடம் பின்னி பிணைந்து இருக்கின்ற வார்த்தைகளை விதைத்த அவ்வையாருக்கு மணி மண்டபம் கட்ட, முதல்வர் வழிகாட்டுதலின்படி, 2022-2023ம் ஆண்டில் அறிவிப்பு வெளியிட்டு இருந்தோம். அனைவரும் பாராட்டுகின்ற அளவிலே சிறப்பான ஒரு நினைவு சின்னம் அமைக்க வேண்டும் என்று அதனை மறுவடிவமைப்பு செய்திட சொன்னார். அந்த வகையில் சுமார் ரூ.12 கோடி செலவில் ஔவையாருக்கு ஒரு மணிமண்டபத்தை கட்டுவதற்கு உண்டான பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. 3 அல்லது 4 மாதங்களில் இந்த பணி துவங்கும்.

பேரவையில் இன்று...
தமிழக சட்டப்பேரவையின் இன்றைய கூட்டம் காலை 10 மணிக்கு கேள்வி நேரத்துடன் தொடங்குகிறது. கேள்வி நேரம் முடிந்ததும், உயர் கல்வி துறை, பள்ளி கல்வி துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. இந்த விவாதத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவார்கள். முடிவில், உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடி, பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பேசுவார்கள். இறுதியாக தங்கள் துறை சார்ந்த புதிய அறிவிப்புகளையும் அமைச்சர்கள் வெளியிடுவார்கள்.


Tags : Mani Mandapam ,Minister ,PK Shekharbabu , Mani Mandapam at Rs 12 crores for them: Minister PK Shekharbabu informed
× RELATED சென்னை கிண்டியில் அமைந்துள்ள...