புதிதாக கட்டப்பட உள்ள 100 அறிவுசார் மையங்களுக்கு கலைஞர் கற்றல் மையம் என பெயர் சூட்ட வேண்டும்: திமுக எம்எல்ஏ எழிலரசன் வலியுறுத்தல்

சட்டப் பேரவையில் காஞ்சிபுரம் தொகுதி உறுப்பினர் சி.வி.எம்.பி. எழிலரசன்(திமுக) பேசியதாவது: இன்றைக்கு 100 அறிவுசார் மையங்கள் தமிழ்நாட்டில் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது. அதில் 36 இப்போது செயலாக்கத்தில் நடந்துக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் வருங்காலங்களில் போட்டித் தேர்வுகளில் பங்கேற்கக்கூடிய மாணவர்கள், இளைஞர்கள் பெரிதும் உதவும். இந்த மையங்களுக்கு, ‘கலைஞர் கற்றல் மையம்’ என்று பெயர் சூட்டுவது மிகச் சாலப் பொருத்தமாக இருக்கும். காஞ்சிபுரம் மாநகராட்சியில் பாதாள சாக்கடைத் திட்டம் தற்போது ரூ.300 கோடி மதிப்பீட்டில் செயலாக்கம் செய்வதற்காக, ஆணை பிறப்பிக்கப்படவிருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: