×

மனித கழிவுகளை மனிதனே அகற்றும் அவலநிலையை தடைச் செய்யக்கூடிய தடைச்சட்டம் 2013 முற்றிலும் அமுல் படுத்தப்பட்டுள்ளது: சட்டப்பேரவையில் கே.என்.நேரு பேச்சு

சென்னை: மனித கழிவுகளை மனிதனே அகற்றும் அவலநிலையை தடைச் செய்யக்கூடிய தடைச்சட்டம் 2013 முற்றிலும் அமுல் படுத்தப்பட்டுள்ளது. நகரின் தூய்மை மற்றும் சுற்றுச்சூழல் நலன் கருதி தங்களை அப்பணியில் முழுமையாக அர்ப்பணித்துள்ள தூய்மைப் பணியாளர்களின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக தமிழக முதலமைச்சரால்  “சுகாதார பணியாளர்கள் மேம்பாட்டு திட்டம்” என்ற திட்டம் 09.12.2022 அன்று மதுரை மாநகரத்தில் தொடங்கி வைக்கப்பட்டது.  

இது தொடர்பாக பேரவையில் அமைச்சர் கூறியதாவது:
மொத்தமுள்ள 20 மாநகராட்சிகளில், 18 மாநகராட்சிகளில் பாதாள சாக்கடைத் திட்டங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டு, 16 மாநகராட்சிகளில் பணிகள் முடிக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ளன. இம் மாநகராட்சிகளில் விடுபட்ட மற்றும் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில்  2 மற்றும் 3-ம் கட்ட பாதாள சாக்கடை திட்டப் பணிகள் செயலாக்கத்திற்கு ரூ.8,922 கோடி மதிப்பீட்டில் எடுத்துக் கொள்ளப்பட்டு பல்வேறு நிலைகளில் உள்ளன. சிவகாசி மாநகராட்சியில் பாதாள சாக்கடை பணிக்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது.

31 நகராட்சிகளில் பாதாள சாக்கடை திட்டம் நகரின் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் பயன்பாட்டில் உள்ளன. இந்த  31 நகரங்களில், 9 நகரங்களில் விடுபட்ட பகுதிகளுக்கும் பாதாள சாக்கடை திட்டத்தினை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், மேட்டுப்பாளையம், இராமேஸ்வரம், காரைக்குடி, சாத்தூர், ஆம்பூர், இராஜபாளையம், திண்டிவனம் மற்றும்  பொன்னேரி ஆகிய நகராட்சிகளில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் ரூ.1,033 கோடி மதிப்பீட்டில் பல்வேறு நிலைகளில் நடைபெற்று வருகின்றன. மேட்டூர் நகராட்சியில் விடுபட்ட பகுதிகளுக்காக ரூ.11 கோடி மதிப்பீட்டிலும், விழுப்புரம் நகரில் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளுக்கு  ரூ.263 கோடி மதிப்பீட்டிலும் பாதாள சாக்கடை திட்டப் பணிகள்  நடைபெற்று வருகின்றன.

இது தவிர மன்னார்குடி, அருப்புக்கோட்டை, திருத்தணி, தென்காசி, செங்கல்பட்டு, பழனி மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய நகரங்களுக்கு பாதாள சாக்கடை திட்டப் பணிகள் செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கைகள் இறுதி செய்யப்பட்டுள்ளது. விரைவில்  துவங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மனித கழிவுகளை மனிதனே அகற்றும் அவலநிலையை தடைச் செய்யக்கூடிய தடைச்சட்டம் 2013 முற்றிலும் அமுல் படுத்தப்பட்டுள்ளது. நகரின் தூய்மை மற்றும் சுற்றுச்சூழல் நலன் கருதி தங்களை அப்பணியில் முழுமையாக அர்ப்பணித்துள்ள தூய்மைப் பணியாளர்களின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக தமிழக முதலமைச்சரால்  “சுகாதார பணியாளர்கள் மேம்பாட்டு திட்டம்” என்ற திட்டம் 09.12.2022 அன்று மதுரை மாநகரத்தில் தொடங்கி வைக்கப்பட்டது.  

இப்பணியினை, முற்றிலுமாக இயந்திரமயமாக்கி அதற்கான பயிற்சிகளை வழங்கி, இயந்திரங்களை மட்டுமே பயன்படுத்தி அனைத்து பணிகளையும் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை இல்லாத பகுதிகளில் முறைகேடாக கழிவுநீர் வெளியேற்றுவதை தடுத்து நீர்நிலைகளை பாதுகாக்கும் வகையில் இந்த அரசு ஆணை பிறப்பித்து இதற்கான விதிகளையும்  உருவாக்கியுள்ளது.தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நகர்புற உள்ளாட்சிகளிலும் மொத்தம் 55,567 கி.மீ நீளமுள்ள சாலைகள் உள்ளன. 2021-22 ஆம் ஆண்டில் பெருநகர சென்னை மாநகராட்சி, இதர மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் மொத்தம் 2540 கி.மீ நீளமுள்ள சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

முதலமைச்சர் 19.10.2022 அன்று நகர்ப்புறங்களில் உள்ள 20,990 கி.மீ நீளமுள்ள சாலைகள் அடுத்த நான்கு ஆண்டுகளில் ரூ.9,588 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும் என அறிவித்து அரசின் சிறப்பு நிதியாக ரூ.2,200 கோடியும் வழங்கினார்கள். இதனடிப்படையில் 2022-23 ஆம் ஆண்டில், பெருநகர சென்னை மாநகராட்சி உட்பட 21 மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் 5,909 கி.மீ நீளமுள்ள சாலைகள் மேம்படுத்தப்படுகின்றன. நகர்ப்புர உள்ளாட்சிகளில் மண்சாலைகளே இல்லை என்ற நிலையை உருவாக்க ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ என்ற உன்னத திட்டத்தின்கீழ் முதலில் நகர்ப்புர உள்ளாட்சிகளில் உள்ள 1,422 கி.மீ நீளமுள்ள மண்சாலைகளின் தரம் உயர்த்த ரூ.1,211 கோடி நிதியினை இந்த ஆண்டின் நிதி நிலை அறிக்கையின் வாயிலாக அளித்துள்ளார்கள்.  

சென்னை மாநகரில் கடந்த ஆண்டில் ரூ.45 கோடி மதிப்பீட்டில் 4 பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. தற்போது, ரூ.135 கோடி மதிப்பீட்டில் கொளத்தூர் - வில்லிவாக்கம் மேம்பாலம், ஸ்டீபன்சன் சாலை பாலம் மற்றும் தி.நகர் ஆகாய நடைபாதை ஆகியன முடியும் தருவாயில் உள்ளன. இதுதவிர, தெற்கு உஸ்மான் சாலை மற்றும் சி.ஐ.டி நகர் முதல் பிரதான சாலை மேம்பாலம் ரூ.131 கோடியிலும், கணேசபுரம் சுரங்கப் பாதையின் மேல் ரூ.142 கோடியில் மேம்பாலமும், மணலி சாலையில் ஏற்கனவே உள்ள இரயில்வே சந்திக்கடவு 2Bக்கு மாற்றாக ரூ.96 கோடியில் மேம்பாலமும்  மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் பணிகள் துவங்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

Tags : KN Nehru ,Legislative Assembly , Human waste, the plight of man-made disposal, Prohibition Act, Legislature, KN Nehru Speech
× RELATED தொடர்ந்து தமிழகத்திற்கு வரும்...