மதுரை: புலம்பெயர் தொழிலாளர்கள் மீது தாக்குதல் என வீடியோ பரப்பிய விவகாரத்தில் கைதான மனீஷ் காஷ்யப் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பீகாரில் கைது செய்யப்பட்ட மனீஷ் காஷ்யபை, மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். பீகார் யூடியூபர் மனீஷ் காஷ்யப் மீது மதுரை மாவட்ட சைபர் கிரைம் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தது.