சென்னை: சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது கீழ்வேளூர் வி.பி. நாகை மாலி(மார்க்சிஸ்ட்) பேசுகையில், ‘‘வாழக்கரை ஊராட்சி தெற்கு தெருவில் மின் கம்பத்துடன் கூடிய தெரு விளக்குகள் அமைக்க அரசு முன்வருமா? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுகையில் ‘‘கடந்த 2016 - 21ம் ஆண்டுகளில் 51 ஆயிரத்து 729 தெருவிளக்கு மற்றும் குடிநீர் மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டது.
2021 - 23 பிப்ரவரி வரை 48 ஆயிரத்து 779 தெருவிளக்குகள் மற்றும் குடிநீர் மின் இணைப்புகள் கொடுக்கப்பட்டு சாதனை படைத்திருக்கிறது. எனவே உறுப்பினர் நாகைமாலி, தெருவிளக்கு அமைப்பது தொடர்பான கோரிக்கைக்கு ஊரக உள்ளாட்சி துறை மூலம் இதற்கான நிதி ஒதுக்கப்பட்டு வழங்கக்கூடிய நிலையில் மின் இணைப்புகள் வழங்கப்படும்”, என்றார்.
