×

கோடையில் மக்கள் கூடும் இடங்களில் தமிழகம் முழுவதும் தண்ணீர் பந்தல்: எஸ்டிபிஐ கட்சி அறிவிப்பு

சென்னை:  எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலக குழு கூட்டம் நேற்று நடந்தது. மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமை தாங்கினார். கூட்டத்தில், கட்சியின் மாநில துணை தலைவர் அப்துல் ஹமீது, பொதுச்செயலாளர்கள் அகமது நவவி, அச.உமர் பாரூக், நிஜாம் முகைதீன், அமைப்பு பொதுச்செயலாளர் நஸூருத்தின், செயலாளர்கள் அபுபக்கர் சித்திக், ராஜா உசேன் மற்றும் செயற்குழு உறுப்பினர் ஷபிக் அகமது கலந்துகொண்டனர். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினர் வழ.ராஜா முகமது கலந்துகொண்டார். கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.

 தமிழகத்தில் கோடை வெயிலில் பொதுமக்களின் தாகத்தை தீர்த்து களைப்பை போக்கும் வகையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக தமிழகம் முழுவதும் மக்கள் கூடும் இடங்களில், பேருந்து நிறுத்தங்களில், தண்ணீர்  பந்தல்  அமைக்க வேண்டும். கடந்த ஆண்டுகளை போல கட்சியின் ஒவ்வொரு கிளைகள்தோறும் வெயில் முடியும் வரை தண்ணீர் பந்தல்  சேவையை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.    



Tags : Tamil Nadu ,STBI , Water festival across Tamil Nadu at public gathering places in summer: STBI party announcement
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்