எருது விடும் விழாவில் மாடு முட்டி சென்னை சிறுவன் பலி

ஜோலார்பேட்டை: திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த அச்சமங்கலம் சாமுடி வட்டம் பகுதியில் நேற்று எருது விடும் திருவிழா நடந்தது. இதில், சீறிப்பாய்ந்து ஓடிய காளைகளை அடக்க முயன்ற 23 பேருக்கு லேசான காயமும், 4 பேருக்கு படுகாயமும் ஏற்பட்டது. இதில், சென்னையில் உள்ள பானி பூரி கடையில் வேலை செய்து வரும் அச்சமங்கலம் அடுத்த பழனி வட்டத்தை சேர்ந்த குசேலன் மகன் விக்ரம் (17) எருது விடும் விழாவை பார்க்க வந்தார். அவர் மீது மாடு முட்டியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Related Stories: