சட்டப்பேரவையில் 2023-24ம் ஆண்டுக்கான துறை ரீதியான மானியக்கோரிக்கை மீது விவாதம் தொடங்கியது. நேற்று காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரம் தொடங்கியது. கேள்வி நேரத்தின் போது உறுப்பினர் எழுப்பிய கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். சட்டப்பேரவை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வந்தார்.
அப்போது சட்டசபையில் இருந்த அனைத்து அதிமுக எம்எல்ஏக்களும் எழுந்து நின்று மேஜையை தட்டி எடப்பாடிக்கு பொது செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்காக வாழ்த்து தெரிவித்தனர். மேலும் கேள்வி நேரத்தின் போது பேசிய அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் பொது செயலாளராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்த பின்னரே தங்களுடைய கேள்வியை தொடங்கினர்.