அமைச்சர் சேகர்பாபு தகவல் கடந்த 10 நாட்களில் 41 கோயில்களில் குடமுழுக்கு

கேள்வி நேரத்தின் போது திருவிடை மருதூர் கோவி.செழியன் (திமுக) பேசுகையில், ‘‘திருவிடைமருதூரில் துக்காச்சியில் ஆபத்சகாயேஸ்வரர் கோயில் உள்ளது. இக் கோயிலில் இருக்கக்கூடிய கல்வெட்டுகளையும், சிதிலமடைந்துள்ள கல்வெட்டுகளையும் சரி செய்து, நல்லதொரு நாளில் விரைவில் குடமுழுக்கு நடத்த அரசு முன்வருமா’’ என்றார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசுகையில், “தமிழக அரசால் கடந்த 20ம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டபோது, 574 கோயில்களுக்கு இதுவரையில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது என்று அறிவிக்கப்பட்டது.

20ம் தேதிக்கு பிறகு, தற்போது வரையில் 615  கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டிருக்கின்றது. கடந்த 10 நாட்களில் 41 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தியிருக்கிற ஆட்சி, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிற ஆட்சி. ஆகவே, உறுப்பினரின் கோரிக்கையையேற்று, கல்வெட்டுகளும் சரிசெய்யப்படும். குடமுழுக்கும் விரைவில் நடத்தித் தரப்படும்” என்றார்.

Related Stories: