×

புதுச்சேரியில் 100 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஸ்மார்ட் வகுப்புகள் நடத்தப்படும்: கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் 100 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஸ்மார்ட் வகுப்புகள் நடத்தப்படும் என்று புதுச்சேரி சட்டமன்றத்தில் கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். அப்போது பேசிய அவர்.

ஸ்மார்ட் வகுப்பு:

45 நடுநிலைப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பு மற்றும் 192 பயிற்சியாளர்கள் ஒப்பந்த அடைப்படையில் நியமனம் செய்யப்படுவர். 152 பயிற்சி பெற்ற பட்டதாரிகள், 145 தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படுவார்கள். 101 பட்டதாரி ஆசிரியர்களுக்கு விரிவுரையாளர்களாக விரைவில் பதவி உயர்வு வழங்கப்படும்.

2-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவில்லை:

புதுச்சேரியில் 130 பேர் மட்டுமே 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவில்லை. 130 பேர் ஏன் பொதுத்தேர்வு எழுதவில்லை என ஆய்வு செய்தபோது ஐ.டி.ஐ போன்ற பாடப்பிரிவில் படிப்பதாகவும் தெரியவந்தது.

நூலகம்

காமராஜர் மணி மண்டபத்தில் போட்டித் தேர்வுக்கான நூலகம் அமைக்கப்படும்.

மைதானங்கள்

புதுச்சேரியில் கிராமப் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு சிறிய அளவில் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படும். கிராமப் பகுதிகளில் இருக்கும் மைதானங்கள் அனைத்தும் தரம் உயர்த்தப்படும். இவ்வாறு தெரிவித்தார்.

 பிரிபெய்டு மின்மீட்டர் திட்டம்:

புதுச்சேரியில் மின்துறை தனியார் மயமாக்கப்படாமல் அரசு வழங்கும் மானியம் தொடரும். மின் கட்டணத்தை தனியார் நிறுவனம் தன்னிச்சையாக நிர்ணயம் செய்ய இயலாது. இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் பெற்ற பின்பே மின் கட்டணம் நிர்ணயம் செய்யப்படும். புதுச்சேரி மாநிலம் முழுவதும் பிரிபெய்டு மின் மீட்டர் திட்டம் செயல்படுத்தப்படும். பிரிபெய்டு மின்மீட்டர் பொருத்தப்பட்டால் SMS/ EMAIL  மூலம் முன்னறிவிப்பின்றி மின் இணைப்பு துண்டிக்கப்படாது என்றும் தெரிவித்தார். 


Tags : Puducherry ,Education Minister ,Namachivayam , Puducherry, 100 government schools, smart classes, education minister notification
× RELATED காராமணிக்குப்பத்தில் காட்சி பொருளான நடமாடும் கழிப்பிட வண்டி