×

தோனி அடுத்த 3 சீசன்களில் விளையாடுவதற்கு போதுமான தகுதியுடன் இருக்கிறார்: மும்பை கேப்டன் ரோஹித் சர்மா பேட்டி

மும்பை: தோனி அடுத்த 3 சீசன்களில் விளையாடுவதற்கு போதுமான தகுதியுடன் இருப்பதாக ரோஹித் சர்மா கருத்து தெரிவித்துள்ளார். இந்த ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடர் வரும் மார்ச் 31-ஆம் தேதி  தொடங்குகிறது. 10 அணிகள் மோதும் இந்த 16-வது சீசன் ஐபிஎல் தொடர் கிட்டத்தட்ட 2 மாதங்கள் நடைபெறும். இதற்கிடையில், மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சென்னை அணியின் கேப்டன் தோனி ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலக மாட்டார் என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சமீபத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ரோஹித் ஷர்மா, “ஐபிஎல் 2023 தோனியின் கடைசி போட்டியாக இருக்கும் என நான் கருதவில்லை. ஆனால், அவர் அடுத்த 2 அல்லது 3 சீசன்களில் விளையாடுவதற்கு போதுமான உடல் தகுதியுடன் இருக்கிறார். இன்னும் நன்றாக விளையாடிக் கொண்டிருக்கிறார். அவர் தொடர்ந்து விளையாடுவார்.” என்று கூறியுள்ளார். மேலும், ஐபிஎல் தொடரின் முதல் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் வரும் மார்ச் 31 -தேதி நடைபெறுகிறது. இதில்சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Thoni ,SASONS ,Mumbai ,Rohit Sharma , Dhoni fit enough to play next 3 seasons: Mumbai captain Rohit Sharma interview
× RELATED ஒரே ஓடுபாதையில் 2 விமானங்கள்: மும்பை ஏர்போர்ட்டில் பரபரப்பு