×

சகோதரத்துவத்தை போற்றும் வகையில் ‘உப்பு ஹட்டுவ’பண்டிகை கோத்தகிரியில் உற்சாகம்

கோத்தகிரி :  கோத்தகிரி அருகே உள்ள கடைகம்பட்டி, ஜக்கலோடை மற்றும் 400 கிராமங்களில் படுகர் இன மக்கள் ‘உப்பு ஹட்டுவ’ பண்டிகை சிறப்பாக கொண்டாடினர்.
நீலகிரி மாவட்டத்தில் கடைகம்பட்டி, ஜக்கலோடை மற்றும் படுகர் இன மக்கள் வாழும் 400 கிராமங்களில் படுகர் இன மக்கள்  ‘உப்பு ஹட்டுவ’ பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இதையொட்டி காலை அவரவர் வீட்டில் இருந்து கொண்டு வந்த உப்பு, பச்சை கடலை, புல் ஆகியவற்றை ஆற்றில் கரைத்து கிடைத்த தண்ணீரை மாடுகளுக்கு வழங்கி வழிபட்டனர்.
அனைவரும் இயற்கை தெய்வத்தை வழிபட்டு, காடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட இலை, நெறி செடிகளை, வீட்டுக்கு கொண்டு வந்து முற்றத்தில் கட்டி தொங்கவிட்டனர்.
இதனால் நோய், நொடிகள் வராமல் இருக்கும் என்பது ஐதீகம்.

உப்பு தண்ணீர் குடிப்பதால் மாடுகள் காலை முதல் மாலை வரை மேய்ச்சலுக்கு எங்கு சென்றாலும் வீட்டுக்கு வந்து விடும் என்று நம்பிக்கை நிலவுகிறது. பின்னர் வீட்டில் பாயாசம் தயாரித்து பரிமாறி மகிழ்ந்தனர். ஒவ்வொரு ஆண்டும் படுகர் இன மக்களின் சகோதரத்துவத்தை உணர்த்தும் வகையில் இந்த பண்டிகை கொண்டாடப்படுவதுடன், அதன் மூலம் வறட்சி நீங்கி மழை பொழிந்து ஆரோக்கியம் மேம்படும் என்று இந்த மக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

Tags : Kotakiri ,Salt Hatua ,Brotherhood , Kothagiri: 'Uppu Hattuva' festival is celebrated by Padukhar people in Kadakampatti, Jakkalodai and 400 villages near Kothagiri.
× RELATED வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் வகையில்...