×

அதிமுக பொதுக்குழு தீர்மான வழக்கில் ஓ.பி.எஸ். மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நாளை நடைபெறும் என்று அறிவிப்பு..!!

சென்னை: அதிமுக பொதுக்குழு தீர்மான வழக்கில் ஓ.பி.எஸ். மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தனி நீதிபதி உத்தரவின் சான்றளிக்கப்பட்ட நகல் இல்லாததால் நாளை விசாரணைக்கு பட்டியலிட நீதிபதி உத்தரவிட்டார். மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி. பிரபாகர் மனுக்கள் எண்ணிடப்பட்டால் விசாரணைக்கு பட்டியலிடப்படும். 2022 ஜூலை 11-ல் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ஐகோர்ட் நீதிபதி குமரேஷ் பாபு அளித்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்திருந்தார்.

Tags : OPS ,AIADMK , AIADMK General Assembly Resolution, O.P.S. Appeal, hearing tomorrow
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்