×

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்.. ரிக்டரில் 4.3ஆக பதிவு.. அச்சத்தில் பொதுமக்கள்!

டெல்லி :ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று 4.3 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த 22ம் தேதி பைசாபாத் நகரில் இருந்து 133 கிமீ தொலைவில் ஹிந்துகுஷ் மலைத் தொடரில் 6.6 என ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இரவு 10.17 மணி அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அண்டை நாடுகளான துர்க்மெனிஸ்தான், கஜகஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பேகிஸ்தான் ஆகிய நாடுகளில் நில அதிர்வுகள் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் டெல்லி, ஹரியானா, ஹிமாச்சல் உள்ளிட்ட மாநிலங்களிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டன.

இந்த நிலநடுக்கத்தால் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் சுமார் 12 பேர் பலி ஆகினர், ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். இந்த நிலையில், ஆஃப்கானிஸ்தானில் இன்று அதிகாலை 5.49 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. காபூல் அருகே 85 கி.மீ. தொலைவில் இன்று அதிகாலை பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3ஆக பதிவாகியுள்ளது.இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு மற்றும் பொருட்கள் சேதம் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களாக ஆஃப்கானிஸ்தானில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.



Tags : Afghanistan ,Richtor , Afghanistan, Earthquake, Fear, Civilians
× RELATED ஆப்கனில் கடும் வெள்ளம்: 33 பேர் பலி