×

ஏடிஎம்மை உடைத்து கொள்ளை முயற்சி

சென்னை: சென்னை கே.கே.நகர் முனுசாமி சாலையில் தனியார் வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. இந்த ஏடிஎம் மையத்தில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர் ஒருவர் பெரிய கற்களை எடுத்து வந்து இயந்திரத்ைத உடைக்க முயற்சி செய்துள்ளார். உடனே, வங்கியின் தலைமை அலுவலகமான ஐதராபாத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் அலாரம் ஒலித்துள்ளது. அதன்பேரில், வங்கி கட்டுப்பாட்டு அறையில் இருந்து கே.கே.நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.  போலீசார் சம்பந்தப்பட்ட ஏடிஎம் மையத்திற்கு சென்று பார்த்த போது, இயந்திரம் பெரிய கற்களை கொண்டு உடைக்க முயன்றதும், ஆனால், முடியாததால் இயந்திரத்தில் உள்ள பணத்தை எடுக்க முடியாமல் மர்ம நபர் ஏமாற்றமடைந்து அங்கிருந்து சென்றதும் தெரியவந்தது. இதனால் பல லட்சம் ரூபாய் தப்பியது. ஏடிஎம் மையத்தில் உள்ள சிசிடிவி பதிவு மற்றும் முனுசாமி சாலையில் உள்ள சிசிடிவி பதிவுகளை பெற்று போலீசார் விசாரிக்கின்றனர்.



Tags : Attempted robbery by breaking into an ATM
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்