யுகாதி திருவிழா

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் பூண்டி கிழக்கு ஒன்றியம் பாஜ சார்பில் யுகாதி திருவிழா நடந்தது. ஒன்றிய தலைவர் சாந்தி ஜான்சன் தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்டத் துணைத் தலைவர் ரவி முன்னிலை வகித்தார். பொதுச்செயலாளர்கள் பாபு, பரமசிவம் வரவேற்றனர். சிறப்பு அழைப்பாளர்களாக மாநில துணைத் தலைவர் சக்கரவர்த்தி, கிழக்கு மாவட்டத் தலைவர் செந்தில்குமார், மாநில அரசியல் தொடர்பு பிரிவு பொறுப்பாளர் பாஸ்கரன், மாநில தகவல் தொடர்பு பிரிவு பொறுப்பாளர் மகேஷ்குமார், கல்வியாளர் வெங்கடேசன்,  மாநில மகளிரணி பொருளாளர் மாலினி ஜெயச்சந்திரன், பூண்டி அதிமுக ஒன்றியக்குழு தலைவர் வெங்கட்ரமணா, ஒன்றிய செயலாளர் பிரசாத், மாவட்ட அரசு தொடர்பு துறை தலைவர் வரதராஜன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். பழங்குடியின பெண்களுக்கு சேலை வழங்கி  வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Related Stories: