×

துப்பாக்கிகளுடன் இந்து முன்னணி நிர்வாகி கைது

கோவை: கோவையில் 2 துப்பாக்கிகளுடன் இந்து முன்னணி நிர்வாகி கைது செய்யப்பட்டார். கோவை ராமநாதபுரம் சுங்கம் பார்க் டவுன் பகுதியில் போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக கோவை ராஜவீதியை சேர்ந்த இந்து முன்னணி கோவை மாவட்ட துணை தலைவர் ரவிச்சந்திரன் (எ) அயோத்தி ரவி நடந்து வந்தார். அவரை சோதனை செய்தபோது, அவரின் இடுப்பில் உரிமம் இல்லாத நாட்டு கைத்துப்பாக்கி ஒன்றை மறைத்து வைத்திருந்தார். அதை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். அவர் அளித்த தகவலின் பேரில் அவரது வீட்டில் மேலும் ஒரு உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கி மற்றும் 5 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அயோத்தி ரவி மீது கோவை மாவட்டத்திலும், மாநகரிலும் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



Tags : Hindu Front Executive Arrested With Guns
× RELATED வாட்ஸ்அப்பில் லிங்க் அனுப்பி...