பாதுகாப்பான அனைத்து விஷயங்களிலும் ஆப்பிரிக்க நட்பு நாடுகளுக்கு இந்தியா ஆதரவு அளிக்கும்: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி

புனே: பாதுகாப்பு தொடர்பான அனைத்து விஷயங்களிலும் ஆப்பிரிக்க நட்பு நாடுகளுக்கு இந்தியா ஆதரவு அளிக்கும் என ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதிபட தெரிவித்துள்ளார்.  ஆப்பிரிக்க நாட்டின் ராணுவ தளபதிகள் உள்பட 10 நாடுகளின் ராணுவ தலைவர்கள் கலந்து கொண்ட மாநாடு மகாராஷ்டிர மாநிலம் புனேவில் நேற்று நடந்தது. இதில் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பேசினார்.  அப்போது, “ஆப்பிரிக்க நாடுகளின் ஆயுதப் படைகளுக்கு பயிற்சி  அளிப்பதில் இந்தியா முன்னிலையில் உள்ளது.  இணையதள பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் இந்த பயிற்சியில் அடங்கியுள்ளன. ஆப்பிரிக்கா உள்ளிட்ட நட்பு நாடுகளின் ஆயுதப் படைகளின் திறனை மேம்படுத்துதல் உள்ளிட்ட பாதுகாப்பு தொடர்பான அனைத்து விஷயங்களுக்கும் ஒத்துழைப்பு அளிப்பதில் இந்தியா உறுதியுடன் உள்ளது. அண்மைக்காலமாக பாதுகாப்பு உபகரணங்களை ஏற்றுமதி செய்வதில் இந்தியா  முன்னிலை வகித்து வருகிறது. இந்தியாவின் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை ஆராய ஆப்பிரிக்க நட்பு நாடுகள் முன்வர வேண்டும்” இவ்வாறு தெரிவித்தார்.

Related Stories: