×

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகங்களுக்கு சொந்தமாக கட்டிடம்

அரக்கோணம் எம்எல்எ சு.ரவி( அதிமுக) பேசுகையில், ‘‘வாடகைக் கட்டடங்களில் இருக்கக்கூடிய ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகங்களுக்குச் சொந்தக் கட்டிடம் கட்ட அரசு முன்வருமா’’ என்றார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் பி.கீதா ஜீவன் பேசுகையில், ‘‘ஒவ்வோர் ஒன்றிய அலுவலகத்திலும் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு ஓர் இடம் கொடுக்க வேண்டுமென்று அரசு கோரிக்கை வைத்து வருகிறது. தனியாக இருக்கும் கட்டிடங்களையும் பராமரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்’’ என்றார்.

Tags : Building owns Integrated Child Development Program offices
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்