×

தெற்கு ரயில்வேயின் முகநூல் பக்கம் ஹேக்.. கார்ட்டூன் புகைப்படம் வைத்ததால் பரபரப்பு..!!

சென்னை: தெற்கு ரயில்வேயின் முகநூல் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இன்று காலை சரியாக 10:30 மணி முதல் தெற்கு ரயில்வேயின் முகநூல் பக்கம் என்பது ஹேக் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹேக் செய்யப்பட்ட முகநூல் பக்கத்தில் ஹேக்கர்கள் கார்ட்டூன் புகைப்படங்களை பகிர்ந்திருப்பதும் தெரியவந்துள்ளது. தெற்கு ரயில்வே சார்பில் சமூக வலைத்தளமான முகநூலில், பல்வேறு ரயில்வே குறித்தான பயனுள்ள பதிவுகள், பதிவு செய்யப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கில் (Southern Railway) என்ற பெயரில் தெற்கு ரயில்வேயின் முகநூல் பேஜ் இயங்கி வருகிறது.

இந்த பேஜ் தற்போது ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. (Quang Thai) என்ற பெயரில் கார்ட்டூன் புகைப்படங்களை ஹேக்கர்கள் பதிவு செய்திருப்பது தெரிய வந்திருக்கிறது. மீண்டும் தெற்கு ரயில்வேயின் சார்பில் முடக்கப்பட்ட முகநூல் பக்கத்தை மீட்டெடுக்க தொழில்நுட்ப வல்லுநர் குழுவினர் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. அதேசமயம் ட்விட்டர், Southern Railway வெப்சைட் ஆகியவை வழக்கம் போல் இயங்குவதாக Southern Railway சார்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வேயின் முகநூல் பக்கம் முடக்கப்பட்டதற்கான காரணம்? யார் செய்தார்கள்? என விசாரணை நடைபெற்று வருகிறது.


Tags : Southern Railway , Southern Railway, Facebook Page, Cartoon Photo
× RELATED ஜூலை 1 முதல் ரயில்களின் நம்பர்கள்...