×

சீனாவில் இருந்து 54 நேரடி முதலீடு திட்டங்கள் இதுவரை அனுமதியளிக்கப்படவில்லை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

டெல்லி: சீனாவில் இருந்து 54 நேரடி முதலீடு திட்டங்கள் பரிசீலனையில் உள்ளதாக ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 2020 ஜூனில் லடாக் எல்லை பகுத்தியில் நடந்த மோதல்களில் 20 இந்திய வீரர்களும் ஏராளமான சீன வீரர்களும் உயிரிழந்தனர். இதை தொடர்ந்து ஒரு நாட்டு உறவுகள் கடும் பதிப்பிற்குள்ளானது. டிக்டாக் உள்ளிட்ட பல்வேறு சீன செயலிகள் மற்றும் நிறுவனங்களுக்கு இந்தியா தடை விதித்தது.

சீன நிறுவனங்கள் இந்தியாவில் செய்யும் நேரடி முதலீடுகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளில் சீனா மற்றும் ஹாங்காங்கில் இருந்து முன்னெடுக்கப்பட 54 நேரடி முதலீடு திட்டங்களுக்கு இதுவரை அனுமதி அளிக்கப்படவில்லை என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மக்களவையில் ஒரு கேள்விக்கு பதிலளிக்கும் போது இதை அவர் தெரிவித்தார். 2020 ஏப்ரல் முதல் 2022 வரை இந்தியாவின் அனாதை நாடுகளிலிருந்து பெறப்பட்ட 423 நேரடி முதலீட்டு திட்டங்களில் 98 திட்டங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.Tags : China ,Finance Minister ,Elise Sitharaman , China, Direct Investment Schemes, Finance Minister Information
× RELATED மும்பை ரயிலில் பயணிகளுடன் செல்பி எடுத்த நிர்மலா சீதாராமன்..!!