×

சென்னையில் காக்னிசண்ட் நிறுவனம் கட்ட ரூ.12 கோடி லஞ்சம் வாங்கிய சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் மீது வழக்கு..!!

சென்னை: சென்னை சோழிங்கநல்லூரில் காக்னிசண்ட் நிறுவனம் கட்ட ரூ.12 கோடி லஞ்சம் வாங்கிய சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் காக்னிசண்ட் டெக்னாலஜி நிறுவனமானது இந்தியாவில் பல்வேறு கிளைகளை கொண்டு செயல்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் சென்னை சோழிங்கநல்லூரில் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் அடுக்குமாடி அலுவலகம் கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக 2011-2016 காலகட்டத்தில் காக்னிசண்ட் நிறுவனத்தின் அடுக்குமாடி அலுவலகம் கட்ட திட்ட அனுமதி பெறுவதற்காக சிஎம்டிஏ அதிகாரிகள் ரூ.12 கோடி லஞ்சம் கொடுத்ததாக புகார் எழுந்ததுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்காவில் உள்ள விசாரணை பிரிவு காக்னிசண்ட் நிறுவனத்திடம் விசாரணை நடத்தி அபராதம் விதித்திருக்கிறது. இதில் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் லஞ்சம் பெற்று காக்னிசண்ட் நிறுவனத்தை கட்டுவதற்கு உதவி செய்திருக்கிறார்கள் என்று அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். 2013-ம் ஆண்டு விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பத்துக்கு காலம் தாழ்த்தப்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அப்போதைய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் வேண்டும் என்றே காலம் தாழ்த்தியது லஞ்சம் பெறுவதற்கு காரணமாக அமைந்ததுள்ளது. பின்னர், லஞ்சம் பெற்ற பிறகு தான் சிஎம்டிஏ அதிகாரிகள் இது தொடர்பாக அனுமதி வழங்கப்பட்டு காக்னிசண்ட் நிறுவனத்தின் கட்டிடம் கட்டப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. அதன் அடிப்படையில் சிஎம்டிஏ அதிகாரிகள் மற்றும் காக்னிசண்ட், எல் அண்ட் டி நிறுவன அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை  நடத்தி வருகின்றனர். பெயர் குறிப்பிடாமல் 9 பேர் மீது இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : CM ,Chennai ,MM TD PA , Chennai, Cognizant, Company, Construction, Bribery, CMDA, Case
× RELATED சென்னையில் 6 செ.மீ. மழை பதிவு