×

அயர்லாந்துடன் முதல் டி20 வங்கதேசம் வெற்றி

சட்டோகிராம்: அயர்லாந்து அணியுடனான முதல் டி20 போட்டியில், டிஎல்எஸ் விதிப்படி வங்கதேச அணி 22 ரன் வித்தியாசத்தில் வென்றது. அகமது சவுத்ரி மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற அயர்லாந்து முதலில் பந்துவீசியது. வங்கதேசம் 19.2 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 207 ரன் குவித்த நிலையில், கனமழை காரணமாக ஆட்டம் தடைபட்டது. லிட்டன் தாஸ் 47, ரோனி தாலுக்தார் 67, ஷமிம் உசேன் 30, கேப்டன் ஷாகிப் ஹசன் 20* ரன் விளாசினர்.

இதையடுத்து, 8 ஓவரில் 104 ரன் எடுத்தால் வெற்றி என அயர்லாந்து அணிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த அணி 8 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 81 ரன் மட்டுமே எடுத்ததை தொடர்ந்து, டிஎல்எஸ் விதிப்படி வங்கதேசம் 22 ரன் வித்தியாசத்தில் வென்றது. வங்கதேச பந்துவீச்சில் தஸ்கின் அகமது 4 விக்கெட், ஹசன் மகமூத் 1 விக்கெட் எடுத்தனர். ரோனி தாலுக்தார் ஆட்ட நாயகன் விருது பெற்றார். வங்கதேசம் 1-0 என முன்னிலை வகிக்க, 2வது டி20 போட்டி சட்டோகிராமில் நாளை நடக்கிறது.

Tags : Bangladesh ,Ireland , Bangladesh win first T20 against Ireland
× RELATED பங்களாதேஷ் நாட்டில் இருந்து...