சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி வழித்தட ரயில் நிலையங்களில் மூடியே கிடக்கும் கழிப்பறைகள்: பயணிகள் அவதி

பொன்னேரி: சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி ரயில் வழித்தடத்தில் இருக்கும் மீஞ்சூர், அத்திப்பட்டு, நந்தியம்பாக்கம் உள்ளிட்ட பல ரயில் நிலையங்களில் உள்ள கழிப்பிட கட்டிடங்கள் மூடியே கிடப்பதால் ரயில் பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.  சென்னை சென்ட்ரல் -  கும்மிடிப்பூண்டி ரயில் வழித்தடத்தில் சென்ட்ரல், பேசின் பிரிட்ஜ், கொருக்கு பேட்டை, தொண்டையார்பேட்டை, வா.ஊ.சி. நகர், திருவொற்றியூர், விம்கோ நகர், கத்திவாக்கம், எண்ணூர், அத்திப்பட்டு புதுநகர், அத்திப்பட்டு, நந்தியம்பாக்கம், மீஞ்சூர், அனுப்பம்பட்டு, பொன்னேரி, கவரப்பேட்டை, கும்மிடிப்பூண்டி ஆகிய ரயில் நிலையங்கள் உள்ளன. தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த வழித்தடத்தில் வேலைக்கும், பள்ளி கல்லூரிகளுக்கும், அடிப்படை தேவைகளுக்கும் பொதுமக்கள் சென்று வருகின்றனர்.

இந்த வழித்தட ரயில் நிலையங்களில் உள்ள பெரும்பாலான கழிப்பிட கட்டிடங்கள் மூடியே கிடப்பதால் அவசர நேரத்தில் இயற்கை உபாதைகளுக்கு செல்ல முடியாமல் இளம் பெண்கள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டவர் பெரிதும் அவதிப்படுகின்றனர். இது சம்பந்தமாக ரயில் பயணிகள் சங்கம் மூலமாகவும் தெற்கு ரயில்வே பொது மேலாளர்களுக்கு பலமுறை புகார் அளித்தும் இது நாள் வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இது சம்பந்தமாக தெற்கு ரயில்வே நிர்வாகம் உடனடியாக ரயில் நிலையங்களில் கட்டப்பட்டுள்ள கழிப்பிட கட்டிடங்களை திறந்து ரயில் பணிகளுக்கு உதவிட செய்யுமாறு ரயிலில்  செல்லும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: