×

மகேஷ்பாபு பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஐதராபாத்: மகேஷ்பாபு நடிக்கும் புதிய படம் ஜனவரி 13ம் தேதி 2024ல் வெளியாகிறது. தெலுங்கு சினிமாவில் பெரிய வெற்றி பெற்ற அத்தடு மற்றும் கலேஜா படங்களுக்குப் பிறகு, மகேஷ் பாபு மற்றும் இயக்குனர் திரிவிக்ரம் னிவாஸ் கூட்டணியில் உருவாகி வருகிறது எஸ்எஸ்எம்பி 28 (தற்காலிக தலைப்பு).  இப்படத்தில் மகேஷ் பாபு ஒரு ஸ்டைலிஷான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் அவர் இந்த படத்திற்காக தன் உடலமைப்பைப் மாற்றியுள்ளார். இப்படம் பார்க்கும் ஆர்வத்துடன் இருக்கும் ரசிகர்களை மகிழ்விக்கும் விதத்தில் தயாரிப்பாளர்கள் இப்படத்தின் வெளியீட்டு தேதியை, மகேஷ் பாபுவின் கதாபாத்திரலுக்குடன் கூடிய ஒரு போஸ்டர் வெளியிட்டுள்ளனர்.

இப்படம் ஜனவரி 13, 2024 அன்று சங்கராந்தி விழா கொண்டாட்டமாக தியேட்டர்களில் வெளியாகும். ஹாரிகா அண்ட் ஹாசினி கிரியேஷன்ஸின் சார்பில் எஸ். ராதாகிருஷ்ணா இந்த படத்தைத் தயாரிக்கிறார். குடும்ப அம்சங்களுடன் கூடிய ஆக்‌ஷன் கலந்த படத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். நவின் நூலி எடிட்டிங் செய்கிறார், கலை இயக்குநராக ஏ.எஸ். பிரகாஷ், இசையை தமன் கவனிக்கிறார். ஒளிப்பதிவாளராக பி.எஸ். வினோத் பணியாற்றுகிறார்.


Tags : Mahesh Babu , Mahesh Babu movie release date announcement
× RELATED மாநில அரசுகள் பெரும் தொகையை இழப்பீடாக...