விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் மழலையர்களுக்கு பட்டமளிப்பு

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தேரடி தெருவில் விவேகானந்தா வித்யாலயா சிபிஎஸ்சி பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் யுகேஜி படித்து முடித்த மழலையர்களுக்கு பட்டமளிப்பு விழா நிகழ்ச்சி விவேகானந்தா வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளி கலை அரங்கில் நடைபெற்றது. பள்ளி இயக்குனர் மங்கையர்கரசி தலைமை தாங்கினார். விவேகானந்தா மெட்ரிகுலேஷன் பள்ளி முதல்வர் திலகவதி முன்னிலை வகித்தார். முன்னதாக, பள்ளி முதல்வர் சியாமளா வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக வழக்கறிஞர் தமிழ்மாறன், கள்ளபிரான்புரம் ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா தனசேகரன் ஆகியோர் கலந்து கொண்டு யுகேஜி முடித்த 85 மழலையர்களுக்கு பட்டங்களை வழங்கினர். இதனைத்தொடர்ந்து, பள்ளி மாணவ - மாணவிகளின் நாட்டியம், நடனம், நாடகம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில், பெற்றோரும், ஆசிரியர்களும் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர். இறுதியாக ஆசிரியை ஷீலா நன்றி கூறினார். 

Related Stories: