×

பழங்குடியினருக்கு ஜாதி சான்று வழங்க பெரியகுட்டிமடுவு மலை கிராமத்தில் ஆர்டிஓ ஆய்வு

அயோத்தியாப்பட்டணம் : அயோத்தியாப்பட்டணம் அருகேயுள்ள அருநூற்றுமலை பெரியக்குட்டி மடுவு, சின்னக்குட்டிமடுவு, சந்துமலை ஆகிய மலை கிராமங்களில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் பழங்குடியினர் ஜாதி சான்றிதழ் கேட்டு, 3 ஆண்டுகளுக்கு முன் விண்ணப்பித்தனர். பழங்குடியினருக்கான ஜாதி சான்றிதழ்களை, ஆர்டிஓ நேரடி விசாரணை நடத்திய பிறகே வழங்குவது நடைமுறையாக உள்ளது. கொரோனா ஊரடங்கால், ஆர்டிஓ நேரடி விசாரணை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், கடந்த 2 ஆண்டுகளாக கல்வி உதவித்தொகை, இடஒதுக்கீடு, அரசின் நலத்திட்ட உதவிகள் ஆகியவற்றை பெற முடியாமல் இப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகினர். அண்மையில் சேலம் ஆர்டிஓவாக  பொறுப்பேற்ற விஷ்ணுவர்த்தினிக்கு இதுகுறித்த தகவல் தெரியவந்தது. இதனையடுத்து, விடுமுறை நாளான நேற்று, ஆர்டிஓ விஷ்ணுவர்த்தினி, தாசில்தார் மாணிக்கம், பேளூர் ஆர்ஐ மகேஸ்வரி, விஏஓக்கள் ராஜசேகரன், அண்ணாமலை ஆகியோருடன் பெரியக்குட்டிமடுவு கிராமத்திற்கு சென்று, பள்ளி வளாகத்தில் முகாமிட்டார். அப்போது, ஜாதிச்சான்று கேட்டு விண்ணப்பித்த மாணவ மாணவியர் மற்றும் பொதுமக்களிடம் நேரடியாக விசாரணை நடத்தினார். மலை மீது அமைந்துள்ள பெரியக்குட்டிமடுவு கிராமத்தில், ஆர்டிஓ மலைப்பாதையில் நடந்து பழங்குடியின மக்களின் வீடுகளுக்கு சென்று விசாரணை நடத்தினார். ஓரிரு நாட்களில் இப்பகுதியை  சேர்ந்த 106 பேருக்கு ஜாதிச்சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவித்தார். அவருக்கு பழங்குடியின மக்கள் நன்றி தெரிவித்தனர்….

The post பழங்குடியினருக்கு ஜாதி சான்று வழங்க பெரியகுட்டிமடுவு மலை கிராமத்தில் ஆர்டிஓ ஆய்வு appeared first on Dinakaran.

Tags : RTO ,Periyakuttimadu mountain ,Ayothiyapattana ,Aurunununururumala ,Periyakutti Maduvu ,Chinnakkuttimaduvu ,Chandpalai ,Ayothiyapattanam ,Periyakuttimudu ,Mountain Village RTO ,
× RELATED கல்லறை தோட்டத்தில் சடலங்களை புதைக்க...