பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது: கண்காணிப்பு குழு தலைவர் தகவல்

கூடலூர்: பெரியாறு அணை கண்காணிப்பு குழு தலைவர் ஒன்றிய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் விஜய்சரண் தலைமையிலான கண்காணிப்பு குழுவினர் நேற்று பெரியாறு அணையில் ஆய்வு செய்தனர். குழுத்தலைவரும், கேரள பிரதிநிதியும் புதிதாக பொறுப்பேற்ற பின் நடைபெறும் முதல் ஆய்வு இது. ஆய்வுக்கு பின் குழு தலைவர் விஜய்சரண் அளித்த பேட்டியில், ‘‘பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது. அணை மராமத்து பணிக்கு பொருட்கள் கொண்டு செல்லும் பிரச்னைக்குரிய வல்லக்கடவு வனப்பாதையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பேபி அணையை பலப்படுத்துவது குறித்து ஆலோசனைக்கூட்டத்தில் தமிழ்நாடு, கேரள பிரதிநிதிகளுடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

Related Stories: