×

சுற்றுலா முகவர்கள் வரும் 31ம் தேதிக்குள் நிறுவனங்களை பதிவு செய்து கொள்ளவேண்டும்: கலெக்டர் ராகுல்நாத் தகவல்

செங்கல்பட்டு: சுற்றுலாத்துறை சார்பாக உண்டு உறைவிட முகாம், சாகச சுற்றுலா, கேரவன் பார்க் சுற்றுலா நடத்துபவர்கள் வரும் 31ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டுமென கலெக்டர் அறிவுறுத்தினார்.  இது குறித்து மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்திற்கு வருகை புரியும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி தமிழக சுற்றுலாத்துறை சார்பாக உண்டு உறைவிடம் முகாம் நடத்துபவர்கள், சாகச சுற்றுலா நடத்துபவர்கள், முகாம் நடத்துபவர்கள், கேரவன் பார்க், சுற்றுலா நடத்துபவர் போன்ற சுற்றுலா முகவர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் அரசாணைகள் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. முகவர்கள் பிரிவில் வகுக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளின்படி பதிவு செய்யாமல் சில நிறுவனங்கள் இயங்கிக் கொண்டிருப்பதாக அறியப்பட்டுள்ளது.

இம்மாத, இறுதிக்குள் (31.3.2023)  www. tntourismtors.com. என்ற இணைய முகவரியில் பதிவு செய்யுமாறு மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார். இதனை, தவறும் பட்சத்தில் தங்களது நிறுவனத்தின் மீது மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்து கொள்ளப்படுகிறது. இதனை, இறுதி வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ளுமாறு மேற்காணும் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், விவரங்களுக்கு, சுற்றுலா அலுவலர், சுற்றுலா அலுவலகம், கோவளம் சாலை, மாமல்லபுரம் என்ற முகவரியிலும், 044 - 2744 2232 தொலைபேசி எண்ணிலும், 91769 95869 என்ற அலைபேசியிலும்,  touristofficermpm@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொண்டு விவரங்கள் அறியலாம்.



Tags : Tourist agency, on 31st, companies should be registered, Collector Rahulnath, information
× RELATED வாக்குச்சாவடி மையங்களில் மயங்கி விழுந்து 2 பேர் பலி: சேலத்தில் சோகம்